×

பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா; மறைமலைநகரில் வேள்வி பூஜை: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மறைமலைநகரில் நடைபெற்ற வேள்வி பூஜை நடந்தது. இதை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் 83வது பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் வேள்வி பூஜை கடந்த 2 நாட்களாக மறைமலை நகரில் நடந்தது. ஆன்மீக இயக்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டா ரெட்டியார், ஆன்மிக இயக்க வேள்வி குழுவின் இணைச்செயலாளர் கோபி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தணிக்கை குழு இணை செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் மன்மதன் வரவேற்றார். மறைமலைநகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 7 மணியளவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 7.30 மணிக்கு மறைமலைநகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் கொடியேற்றி வைத்தார். 9 மணிக்கு உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெறவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.

பின்னர் மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரூ.7 லட்சம் மதிப்பில் 20 பேருக்கு மிதிவண்டி, 13 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்கள், 13 சலவை பெட்டிகள், 15 பயிர் பூச்சி மருந்து தெளிப்பான்கள், 6 விவசாய கருவிகள், 200 மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் ஆகியவற்றை மறைமலைநகர் நகர மன்ற தலைவர் சண்முகம் வழங்கினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

The post பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா; மறைமலைநகரில் வேள்வி பூஜை: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Bankaru ,Auddar ,Varalakshmi Madusuthanan ,MLA ,Varalakshmi ,Madusuthanan MLA ,Anakimalayanagar ,Pooja ,Arimilayalinagar ,Bangaru Bankaru Auddar ,Mellmaruvathur ,Bankaru Foodar's Birthday Festival ,
× RELATED மங்காத வாழ்வளிப்பாள் பங்காரு காமாட்சி